Chetty Nadu Milk Panaiyaram :
செட்டிநாடு உணவு வகை என்றாலே சாப்பிடுவதற்கு கொஞ்சம் ஆர்வம் அதிகமாவே இருக்கும். ஏனென்றால், அந்த உணவு ருசியாகவும் செய்முறை எளிதாகவும் இருப்பதால் சமைத்து தருபவர்க்கும் சரி சாப்பிடுபவர்கும் சரி செட்டிநாடு உணவு என்றால் விருப்பம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – ½ கப்
உளுத்தம் பருப்பு – ½ கப்
தேங்காய் பால் – 1 கப்
காய்ச்சிய பால் – ½ கப்
ஏலக்காய்ப் பொடி – ¼ கப்
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவைக்கு
முந்திரி, பாதாம் – 3
செய்முறை :
முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
3 மணி நேரம் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை கழுவி கெட்டியாக அரைத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மாவை கரண்டியில் எடுத்து ஊற்றி, அது பொன் நிறமாகும் வரை பொறித்து எடுத்து எண்ணெய் இருக்கும் வரை வைக்க வேண்டும்.
மற்றொரு பக்கத்தில் அடி கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி அதில் ஏலக்காய் பொடி, சர்க்கரை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் அதனுடன் பொறித்து எடுத்த பணியாரைத்தை போட்டு 15 நிமிடங்கள் நன்கு ஊற விட வேண்டும்.
நன்கு ஊறிய பிறகு எடுத்து பரிமாறினால் சுவையான பால் பணியாரம் தயார்.