Chettinad Crab Kulmabu : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Chettinad Crab Kulmabu :

தேவையான பொருட்கள்:

நண்டு – ஒரு கிலோ,
பூண்டு – 4 பல்,
வெங்காயம் – 2,
நாட்டுத் தக்காளி – 3,
மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
சோம்பு – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
மல்லித் தூள் – 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

1) சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

2) கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி, பிறகு அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கவும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் இயல்பாகச் சுரக்க வைக்க உதவும் சிறுகீரையை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

3) மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

4) பிறகு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பிறகு நண்டை போட்டு மூடிவிட வேண்டும்.

5) நண்டு வெந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கி மூடி வைக்க வேண்டும்.

6) சுவையான செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here