Kavin Losliya
கவின், லாஸ்லியா காதல் விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் சேரன் பேசியத்திற்கு கவின் ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்ததால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு இன்றைய தலைமுறை இளைஞர்கள் மத்தியிலும் பரிச்சயமாகி விட்டார் சேரன்.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது லாஸ்லியாவை தன் மகளாக நினைத்து அதிக பாசத்தை செலுத்தினார். லாஸ்லியாவும் கவினின் காதல் வரை சேரன் மீது பாசமாக தான் இருந்தார்.

கவினும் லாஸ்லியாவும் காதலிக்க தொடங்கியதும் லாஸிற்குள் சேரன் மீதான அபிப்ராயம் மாற தொடங்கியது.

இந்நிலையில் சேரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கவின் லாஸ்லியா காதல் குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கவின் ரசிகர்கள் சேரனை வம்பிழுக்க தொடங்கியுள்ளனர், இதனையடுத்து சேரன் நான் பேசியது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள், நான் அவர்களின் வாழ்க்கையை தலையிட மாட்டேன், அதற்கான அவசியமும் இல்லை.

இனி அவர்கள் இருவரின் பெயர் என்னுடைய வாயில் இருந்து வராது என கூறியுள்ளார். இனியும் இது குறித்து என்னிடம் பிரச்சனை செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.