Cheran Speech
Cheran Speech

Cheran Speech – திருமணம் படத்தின் தயாரிப்பாளர் எனக்கு தெய்வம் என இயக்குனர் சேரன் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சேரன். தன்னுடைய தனிப்பட்ட திரைக்கதைகளால் தமிழ் சினிமாவில் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது திருமணம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் திருமண நிகழ்ச்சி போலவே நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சேரன் இப்படத்தின் தயாரிப்பாளர் குறித்து இதுவரை எவருக்கும் தெரியாத பலதரப்பட்ட விசியங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் இப்படத்தின் தயாரிப்பாளர் குறித்து பேசியதாவது, ஒரு கஷ்டம் என வரும் போது உறவினர்கள், நண்பர்கள் என அனைவருமே விலகி கொள்வார்கள்.

காரணம் அவர்களுக்கு உதவி செய்ய போனால் அந்த பிரச்சனை நம்மை தொற்றி கொள்ளுமோ? அந்த பிரச்சனையை நாம சுமக்க வேண்டியதாகிடுமோ என்ற பயம் தான்.

என்கிட்டே நிறைய கதை இருந்தும் என்னுடைய படத்தை தயாரிக்க பெரிய தயாரிப்பாளர்கள் முதல் அனைவருமே தயங்கினார்கள். சேரன் அப்டேட்டாக இருப்பாரா என யோசித்தார்கள். மேலும் அவருக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கு அதெல்லாம் படத்திற்கு பிரச்சனையாக அமைந்து விடுமோ என யோசித்தார்கள்.

ஆனால் அதெல்லாம் எதார்த்தம். இங்கு பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்கிறது. பணம் இல்லைனா பிணம் என உருக்கமாக பேசினார். இருந்தாலும் நான் திரும்ப திரும்ப முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.

இந்த சமயத்தில் தான் நான் என்னுடைய மகளின் மூலமாக வெள்ளையப்பன் சார் அவர்களுடன் பழக்கமானேன்.

அவர் என்னிடம் ஏன் படம் பண்ணாமல் இருக்கீங்க என கேட்டார். கதைகள் நிறைய இருக்கு ஆனால் சில பிரச்சனையால் பணம் பண்ண முடியாமல் இருந்து வருகிறேன்.

வண்டி நல்லா தான் போயிட்டு இருந்தது. சில பிரச்சனைகளால் படம் இயக்கவில்லை என கூறினேன்.

அப்போது அவர் எனக்கு உங்களின் படத்தை பார்த்து ரசித்த ஒருவர் உங்களை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறார் என பிரேம் சாரை அறிமுகப்படுத்தினார்.

உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்டார். இந்த மாதிரி சிறுசிறு பிரச்சனைகள் இருக்கு என கூறினேன். அதையெல்லாம் நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.

நீங்கள் உங்கள் வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க. இனி வண்டி நிற்கவே கூடாது என கூறி என்னை நம்பி இவ்வளவு செலவு செய்துள்ளார்கள்.

இதுவரை இவர்கள் படத்தை கூட பார்க்கவில்லை. இவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்காகவே நான் இந்த படத்தை சிறந்த படமாக கொடுத்துள்ளேன்.

நிச்சயம் இப்படம் இவர்களுக்கும் விமர்சனங்கள், வியாபாரம் என அனைத்து விதத்திலும் சிறந்த படமாக இருக்கும் என நம்புகிறேன்.

இவர்கள் இருவருமே என்னுடைய தெய்வங்கள். என் வாழ்நாளில் நானும் என் குடும்பத்தினரும் இவர்களை மறக்கவே மாட்டோம் என கூறினார்.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் படம் உலகம் முழுவதும் வெளியாகிவுள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. திருமணத்துக்கு முன்பு, திருமணத்தின் போது நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள், பிரச்னைகள் குறித்த காட்சிகள் எனச் சேரனின் `டச்’ உடன் டிரெய்லர் வெளிவந்துள்ளது.

பின்னணி இசை, காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதால் டிரெய்லர் வரவேற்பைப் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here