Cheran Request to CM
Cheran Request to CM

இதைவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என மது கிடைத்திருப்பது குறித்து சேரன் பதிவிட்டுள்ளார்.

Cheran Request to CM : கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என கூறியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள், எதிர்க்கட்சிகள் என பலரும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முழு மதுவிலக்கை அமல்படுத்த இதுதான் சரியான சந்தர்ப்பம், மூடிய கடைகள் மூடியதாகவே இருக்கட்டும் என கூறி வருகின்றனர்.

என்ன மன்னிச்சிடுங்க தல ரசிகர்களே.. அஜித்தின் பிறந்த நாளில் சாந்தனு பதிவிட்ட ட்வீட் – காரணம் என்ன?

ஆனால் அரசின் வருவாய்க்காக மதுக்கடைகளை திறப்பதென முடிவெடுத்துள்ளது மாநில அரசு. இதுகுறித்து இயக்குனர் சேரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் @CMOTamilNadu நிரந்தர மதுவிலக்கு அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்தேன் அய்யா.. இதைவிட மதுவிலக்கு அமுல்படுத்த வேறு வாய்ப்பு கிடைக்காது. மீண்டும் உங்கள் ஆட்சி உருவாக்க இது ஒரு பெரும் ஆயுதமாக மாறியிருக்கும். அரசிற்கான வருமானம் என்பதைவிட பெரும்பாலான மக்களின் உயிர்காப்பதல்லவா முக்கியம் என கூறியுள்ளார்.