Cheran Real Face : Meera Mithun Says Unrevaled Info.! | Kolywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Bigg Boss Tamil 3
சேரன் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இல்லை, இயக்குனராகவே இருந்து வருகிறார் என மீரா மிதுன் குற்றம் சாட்டியுள்ளார்.

Cheran Real Face : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16-வது போட்டியாளராக உள்ளே சென்றவர் மீரா மிதுன்.

சேரன் மீது அபாண்டமாக பழியை சுமத்தி தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட அவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் சேரன் குறித்து பேசியுள்ளார்.

நான் என்ன உணர்ந்தேனோ அதை தான் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் கூறினேன். ஆரம்பத்தில் இருந்தே எனக்கும் சேரனுக்கும் செட்டாகவில்லை. அவர் பேசும் போது குறுக்கிட்டால் அவருக்கு கோபம் வந்து விடும்.

ஆரம்பத்தில் இருந்தே அவர் நான் கருப்பாக இருப்பதால் தாழ்வு மனைப்பான்மையுடன் இருந்து வருவதாக மட்டம் தட்டி கொண்டே இருந்தார்.

அதனால் தான் எனக்கும் அவருக்கும் இடையே நிறைய சண்டைகள் உருவானது என கூறியுள்ளார்.

மொத்தத்தில் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயும் ஒரு இயக்குனரை போலவே இருந்து வருகிறார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.