Cheran in Native Village

பல வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்று உள்ளார் இயக்குனர் சேரன்.

Cheran in Native Village : தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகளை கொண்டவர் இயக்குனர் சேரன். இவரது நடிப்பில் வெளியான ஆட்டோகிராஃப் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. தற்போது இவர் எந்த ஒரு படத்தையும் இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் சேரன் தன்னுடைய சொந்த ஊருக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்றுள்ளார். அங்கு தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

மண் சுமந்த சிவனுக்கு திருவிழா : தோஷங்கள் நீங்கும் வழிபாடு..

அந்த பதிவில்என் ஊருக்கு போயிருந்தேன்.. இதுவரை விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் தனியே செல்வதற்கு சற்று பயமாக இருக்கும் சாலை தான் எங்களுக்கு… இப்போது வழிமுழுவதும் விளக்குக்கம்பங்கள் வந்துவிட்டது. அதன் காரணம் எங்கள் ஊர் பிரசிடெண்ட் தம்பி மு.இளையராஜாவின் முயற்சி. பாராட்டுகிறேன். எனது ஊரின் பெயர் பழையூர்ப்பட்டி.. வெள்ளலூர் நாடு. மேலூர் தாலுகாவில் இருக்கிறது..
எங்கள் கிராமங்களுக்கென்று சிறப்பான அம்சங்கள் உண்டு. எங்களுக்கான தெய்வங்கள் உண்டு.. எந்த ஊரில் வாழும் சிறுவர்களும் எங்கள் மண்ணில் புரண்டு விளையாட ஆசைப்படுவார்கள்.. மக்களின் மனதும் அதன் ஈரமுமே சான்று என குறிப்பிட்டுள்ளார்

Thala Ajith Gun Shooting Latest Viral Video | #Valimai