Chepauk Super Gillies : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019

Chepauk Super Gillies :

Chepauk Super Gillies  : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி 2-வது முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வென்று புதிய சாதனை படைத்தது.

இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி புதிய வரலாறு சாதனை படைத்தது. டிஎன்பிஎல் கோப்பையை இரண்டு முறை வென்ற முதல் அணி என்ற சாதனையை புரிந்தது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று தொடக்கம் !

2016-ல் டிஎன்பிஎல் டி20 லீக் அறிமுகமானது. இதுவரை 4 தொடர்கள் நடந்துள்ளன. டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகியவை தலா 1 முறை சாம்பியன் பட்டம் பெற்று இருந்தன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2017-ல் சாம்பியன் பட்டம் வென்றது.

கில்லீஸ் அணிக்கு ரூ.1 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ரூ.60 லட்சம் கிடைத்தது.

சிவா – ரஜினி இணையும் படத்திற்கு இவரா இசையமைப்பாளர் – அப்போ பக்கா மாஸ்.!

இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி கூறியதாவது:-

இது ஒரு தனித்துவமான வெற்றி. ஆட்டத்தின் பாதி கட்டத்தில் ‘டாஸ்’ வென்று நான் என்ன செய்தேன் என்ற சந்தேகம் எழுந்தது.

பெரியசாமியின் பந்து வீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. சசிதேவன் பங்களிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது. சிறப்பாக செயல்பட்டதால் எல்லாமே சரியாக நடந்தது. வீரர்களின் கூட்டு முயற்சியால் சாம்பியன் பட்டத்தை வென்றோம்.

விஜய் சங்கர் கூறும்போது, “திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன், ஹரி நிஷாந்தை எளிதில் அவுட் செய்துவிட வேண்டும் என்று திட்டமிட்டோம். அதன்படி நடந்தது. பெரியசாமியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது” என்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.