chennai super kings
chennai super kings

 chennai super kings :

ஐதராபாத்: பிரிமியர் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் பட்சத்தில் சென்னை அணி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறி அசத்தலாம்.

இந்தியாவில் பிரிமியர் தொடரின் 12வது சீசன் தற்போது நடக்கிறது. நடப்பு சாம்பியன் சென்னை, மும்பை உட்பட 8 அணிகள் மோதுகின்றன.

இன்று ஐதராபாத்தில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, வில்லியம்சன் கேப்டனாக உள்ள ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

30 வயதுக்கும் மேற்பட்ட ‘சீனியர்கள்’அதிகம் உள்ள அணி என விமர்சிக்கப்பட்டது சென்னை அணி. இதற்கு கடந்த முறை கோப்பை வென்று பதிலடி தந்தனர். இம்முறையும் இதே விமர்சனம் எழுந்தது.

இருப்பினும் இதுவரை பங்கேற்ற 8 போட்டியில் 7ல் வென்று ‘டாப்’ ஆக உள்ளது. வாட்சன் கோட்டை விட்டால் ரெய்னா, இவர்கள் ஏமாற்றினால் தோனி என அடுத்தடுத்து கைகொடுக்க அணியில் வீரர்கள் இருப்பது சென்னைக்கு பெரும் பலம்.

அதேநேரம் வாட்சன் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. டுபிளசி, கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு, பின் வரிசையில் ஜடேஜா பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

பவுலிங்கில் தீபக் சகாருடன் (10 விக்.,) இணைந்த ஷர்துல் தாகூர், கோல்கட்டாவுக்கு எதிராக ‘பார்முக்கு’ திரும்பியது ஆறுதல் தருகிறது.

இத்தொடரில் அதிக விக்கெட் சாய்த்தவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ள 40 வயதான இம்ரான் தாகிர் (13 விக்.,), ஜடேஜா (7) என ‘சுழல்’ கூட்டணி மீண்டும் சென்னைக்கு பலம் சேர்க்கும் என நம்பப்படுகிறது.

சென்னை தவிர, மற்ற ஆடுகளங்களில் சான்ட்னர் என்ற தோனியின் திட்டம் எடுபடுவதால் இன்றும் ஹர்பஜன் களமிறங்குவது சந்தேகம் தான்.

ஐதராபாத் அணிக்கு துவக்க ஜோடி வார்னர் (400 ரன்), பேர்ஸ்டோவ் (304), அடுத்து உலக கோப்பை அணியில் இடம் பெற்ற உற்சாகத்தில் உள்ள விஜய் சங்கர் (132) என மூன்று பேரைத் தான் பெரிதும் நம்பியுள்ளது. மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றுகின்றனர்.

‘மிடில் ஆர்டரில்’ மணிஷ் பாண்டே (6 போட்டி, 54 ரன்), தீபக் ஹூடா (6ல் 47), யூசுப் பதான் (6ல், 32) என மூவரும் முற்றிலும் சொதப்புகின்றனர்.

கேப்டனாக திரும்பியுள்ள வில்லியம்சனும் (14, 3) ஏமாற்ற, ‘ஹாட்ரிக்’ தோல்வி அடைந்த சோகத்தில் உள்ளது.

பவுலிங்கில் புவனேஷ்வர், கலீல் அகமது விக்கெட் வீழ்த்த துவங்கியிருப்பது நல்ல விஷயம்.

கடந்த 2018 சீசனில் 17 போட்டியில் 21 விக்கெட் சாய்த்த ரஷித் கான், இம்முறை 7 போட்டியில் 6 விக்கெட் மட்டும் சாய்த்தது அணிக்கு பெரும் பலவீனமாக உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.