Sarkar Poster

Sarkar Poster : விஜய் தான் அடுத்த முதல்வர் என்பது போல சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு என பலர் நடித்துள்ள படம் சர்கார்.

இந்த படம் நாளை முதல் இந்தியாவிலும் இன்று முதல் ஓவர்சீஸ் நாடுகளிலும் வெளியாக உள்ளது.

சர்கார் கதை திருட்டு விவகாரம் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வெளியாக உள்ளது.

இதனால் ரசிகர்கள் அனைவரும் பேனர், போஸ்டர் என தங்களது பங்கிற்கு பட்டய கிளப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும் என்ற வசனத்துடன் ஒரு விரல் புரட்சியை குறித்து விதமாக மையிடப்பட்டுள்ள விரலை வைத்து அடுத்த முதல்வர் விஜய் தான் என கூறு வகையில் போஸ்டர் வடிமைக்க பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்திலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

Sarkar Poster

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.