salem 8 way Road :
salem 8 way Road :

salem 8 way Road : சென்னை: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை- சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில், 8 வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்தது.

இந்த திட்டத்திற்காக சுமார் 10 ஆயிரம் கோடி செலவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

சுமார் 277 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்படவுள்ள இந்த 8 வழி சாலைக்கு சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.இதனால் சாதாரண மக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளானார்கள்.

அதை தொடர்ந்து, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட கோரி 5 மாவட்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த திட்டத்திற்காக 5 மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதித்து ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்தனர்.

மேலும் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் ” எனவும் கூறி தீர்ப்பளித்தனர்.,

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.