Chennai National Awards 2018

Chennai National Awards 2018 : 

சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ள படங்களின் லிஸ்ட்டால் நெட்டிசன்கள் இது என்னபா டாப் ஹீரோக்களுக்கு வந்த சோதனை என புலம்ப தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீஸாகி வருகின்றன. ஆனால் அனைத்து படங்களும் ரசிகர்கள் வரவேற்பை பெற்று விடுவதில்லை.

அப்படி வரவேற்பை பெறும் படங்கள் அனைத்தும் மத்திய, மாநில, சர்வதேச விருதுகளை பெற்று விடுவதில்லை. தற்போது சென்னை சர்வதேச விருதுக்கான போட்டிக்கு தேர்வாகியுள்ள படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

அந்த லிஸ்ட் இதோ

1. 96

2. இரும்புத்திரை

3. கடைக்குட்டி சிங்கம்

4. அபியும் நானும்

5. இரவுக்கு ஆயிரம் கண்கள்

6. ஜீனியஸ்

7. மெர்குரி

8. பரியேறும் பெருமாள்

9. அண்ணனுக்கு ஜே

10. ராட்சசன்

11. வடசென்னை

12. வேலைக்காரன்

மொத்தம் 12 தமிழ் படங்கள் தேர்வாகியுள்ள நிலையில் இந்த லிஸ்டில் தல அஜித், தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் என மிக பெரிய ஜாம்புவான்களான நடிகர்களின் படங்கள் ஒன்று கூட இடம்பெற வில்லை என்பது தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here