Central Railway Station :
Central Railway Station :

Central Railway Station : சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம், தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்து இருந்தார்.

தற்போது பிரதமரின் இந்த அறிவிப்பை அடுத்து, பெயரை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை என்றாலே சட்டென்று அனைவருக்கும் நினைவுக்கு வரும் சில இடங்களில் முக்கியமான ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தான்..!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து அன்றாடம் லட்சக்கணக்கானோர் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தினந்தோறும் பயணிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில்,

‘சென்னை ரயில் நிலையத்தின் பெயரை டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று மாற்ற வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இத்தீர்மானம் பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 12-ல் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்துக்கு கடந்த மாதம் வந்த பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்.. என்று அறிவித்திருந்தார்.

இதை அடுத்து, பிரதமரின் ஒப்பதைலயடுத்து “சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்” என்று,

பெயர் மாற்றம் செய்வதற்கான அறிவிப்பை அரசிதழில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ளார்.,

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.