Chennai CCTV Cameras
Chennai CCTV Cameras

Chennai CCTV Cameras – சென்னை: சென்னையில் சமீப காலமாக திருட்டு, கொலை, கொள்ளை என பல குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெறும் குற்றங்களில், போலீசாருக்கு பலவற்றிலும் சிசிடிவி மூலமே துப்பு கிடைத்துள்ளது.

சிசிடிவி கேமராக்கள் காவல்துறைக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் புதியதாக அமைக்கப்பட்ட 437 சிசிடிவி கேமராகளின் செயல்பாட்டை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளார்.

சிசிடிவி கேமராக்கள் செயற்பாட்டை சென்னையில் இன்று அவர் துவக்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தலைநகர் சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா என பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சமீப காலமாக நடைபெறும் குற்றங்கள் பலவற்றிலும் சிசிடிவி மூலமே துப்பு கிடைத்துள்ளது. இது காவல்துறைக்கு பெரும் உதவியாக இருந்தது.

எனவே சென்னை பெருநகர் முழுவதையுமே கண்காணிப்பு கேமராவின் வளையத்திற்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் 60 சதவீத இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கீழ்பாக்கம், அண்ணா வளைவு பகுதிகளில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

இந்நிலையில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படடதால், அனைத்து விதமான குற்றங்களும் தற்போது குறைந்து உள்ளது.

மேலும் குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது” இவ்வாறு பேசினார்.