Chenna Masala
Chenna Masala

Chenna Masala : இதனுடன் கொண்டை கடலை மற்றும் வெங்காயம் அரைத்து சேர்ப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் இது இட்லி, தோசை மற்றும் சப்பாப்திக்கு நல்ல துணை உணவாக இருக்கும்.

தேவையா பொருட்கள் :

கொண்டை கடலை – ஒரு கப்
வெங்காயம் – 3
தக்காளி – 3
கிராம்பு, சோம்பு, ஏலக்காய், பட்டை – சிறிதளவு
இஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன்
வெண்ணை – 2 ஸ்பூன்
கடலை – வேக வைத்து மசித்தது ஒரு கப்
மீளாய் தூள் – 2ஸ்பூன்
மல்லி தூள், கரம் மசாலா, சாட் மசாலா –தலா 1 ஸ்பூன்
மல்லி இலை – சிறிதளவு
எண்ணை, உப்பு – தேவையான அளவு

செய்முறை :

கொண்டை கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணை ஊற்றி அதில் வெங்காயம் போட்டு வதக்க வேண்டும் பிறகு அதே கடாயில் தக்காளி போட்டு வதக்க வேண்டும். இரண்டும் சூடு குறைந்த உடன் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

கடாயில் வெண்ணை போட்டு அதில் எண்ணை சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் கிராம்பு போட்டு பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போன பிறகு வெங்காயம்,தக்காளி விழுதை சேர்த்து வதகிய பின் அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கொள்ள வேண்டும்.

அதனை பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட வேண்டும். பச்சை வாசம் போன பிறகு அதில் கொண்டை கடலை சேர்த்துக் கொள்ள வேண்டும் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பின் அதனுடன் மசித்த கடலை மற்றும் சாட் மசாலா சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

10 நிமிடம் கழித்து அதில் மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான சென்னா மசாலா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here