
ஆதியும், பார்வதியும் இரவு முழுவதும் வாட்ஸ்-ஆப்பில் உரையாடி மகிழ்கின்றனர். இதனால் தூக்கம் கலக்கத்துடன் வேலைக்கு வருகிறாள் பார்வதி. இதை அறிந்த ஐஸ்வர்யா, வனஜாவோடு சேர்ந்து பார்வதியை மறைமுகமாக பழிவாங்க திட்டம் தீட்டுகிறாள்.
அதற்காக ஐஸ்வர்யா தன் அத்தை அகிலாவிடம் சென்று காபி குடிக்கலாமா என்று கேட்கிறாள். அகிலா காபி குடிப்பதற்காக பார்வதியை அழைக்கிறார் . ஆனால் பார்வதி தூக்க கலக்கத்தால் தாமதமாக வருகிறாள்.
அகிலா ஆத்திரமடைந்து பார்வதியிடம் நீ கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாதே, நல்ல வேலைக்காரியா இருக்கும் வரை தான் உனக்கு மரியாதை, மேலும் எனக்கு கொடுக்கும் மரியாதையை போல் என் மறுமகள் ஐஸ்வர்யாவுக்கு நீ கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறாள்.
பார்வதி கண்கள் கலங்க அங்கிருந்து சென்றுவிடுகிறாள். அகிலா, ஐஸ்வர்யா, மற்றும் வனஜா காலை உணவு உண்ணும்பொழுது ,அகிலா ஆதிக்கு போன் செய்து ஆதியை சாப்பிட்டாயா? என்று கேட்கிறாள். அதற்கு ஆதி முக்கியமான ஒரு போனுக்காக காத்திருக்கிறேன், பிறகு சாப்பிடுகிறேன் என்கிறான் .
அகிலா அந்த முக்கியமான போன்காலை தூக்கிப்போடு ஆதி. அம்மா சொல்வதை கேள்,முதலில் சாப்பிடு என்கிறாள். இதை கேட்ட பார்வதியின் மனம் துடிக்கிறாள். ஆதி பல முறை பார்வதிக்கு போன் செய்கிறான் .
ஆனால் பார்வதி, அகிலா கூறிதை நினைத்து ஆதியின் போனை எடுககாமல் இருக்கிறாள். ஆதி என்ன காரணம் என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறான். ஆதி- பார்வதி காதல் தொடருமா? என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.