Chellamma Song Record from Doctor
Chellamma Song Record from Doctor

டாக்டர் படத்தின் செல்லமே பாடல் படைத்த சாதனை குறித்த வீடியோவை அனிருத் வெளியிட்டுள்ளார்.

Chellamma Song Record from Doctor : தமிழ் சினிமாவில முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று டாக்டர். இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனரான நெல்சன் திலீப்குமார இயக்கியுள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலிருந்து செல்லமே என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

தளபதி விஜய்யின் வெறித்தனம் பாடல் படைத்த புதிய சாதனை – தெறிக்க விட்டு கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

தற்போது இந்த பாடல் லிரிக்ஸ் வீடியோ யூட்யூப் பக்கத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அனிருத். இதனை அறிவிக்கும் வகையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CET9gpPhhGi/?igshid=1ia6053jz9o7g

ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியதும் டாக்டர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.