Cheff Venkatesh About Favourite Comali

எவ்வளவு பேர் இருந்தாலும் எனக்கு பிடித்த கோமாளி இவர்தான் என செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.

Cheff Venkatesh About Favourite Comali : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சி அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், ஷகிலா, தீபா, மதுரை முத்து, பவித்ரா தர்ஷன் குப்தா என பலர் குக்காக பங்கேற்றனர். மேலும் பாலா, புகழ், சிவாங்கி, சுனிதா உள்ளிட்டோர் கோமாளிகளாக பங்கேற்றனர். ‌‌

மேலும் நடுவர்களாக செப் தாமோதரன் மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி குறித்து வெங்கடேஷ் பட் அளித்த பேட்டி ஒன்றில் உங்களுக்கு பிடித்த கோமாளி யார் என கேட்டதற்கு புகழ் தான் என தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு பாபா பாஸ்கர், கனி மற்றும் அஸ்வின் ஆகியோரையும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.