குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் குறித்த ரகசியங்களை உடைத்துள்ளார் செஃப் தாமு.

Chef Dhamu Reveals Secrets of CWC2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரத்துடன் முடிவுக்கு வர உள்ளது.

போட்டியின் இறுதி கட்டத்தில் கனி, பாபா பாஸ்கர், அஸ்வின், ஷகீலா ஆகியோர் உள்ளனர். இவர்களில் கனி டைட்டில் வின்னர் ஷகீலா மற்றும் பாபா பாஸ்கர் ஆகியோர் ரன்னர் என கூறி வருகின்றனர்.

இப்படியான நிலையில் செஃப் தாமு அளித்த பேட்டி ஒன்றில் பினாலே ரிசல்ட் உங்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியின் ஷூட்டிங் திங்கட்கிழமை காலை 3 மணிக்கு முடிந்தது. ஆனாலும் யாரும் வீட்டுக்கு போகல. எல்லாரும் ஷோ முடிந்திடுச்சேனு கண் கலங்கினாங்க. நாங்களும் தான் என கூறியுள்ளார்.

மேலும் சீசன் 1-ஐ விட சீசன் 2 நன்றாக இருந்தது. ஈகோ இல்ல அதான் சீசன் 2 ஹைலைட் என தெரிவித்துள்ளார். சீசன் 3 நிச்சயம் வரும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்ல வரும். கோமாளிகளில் மாற்றம் இல்லை என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.