குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணம் என்ன என உண்மையை உடைத்து உள்ளார் செஃப் தாமு.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக பங்கேற்று வருபவர் மணிமேகலை. நான்கு சீசன்களாக கோமாளியாக இருந்து வந்த இந்த திடீரென இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இவரது வெளியேற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில் செப் தாமு அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் இது பற்றி பேசி உள்ளார். மணிமேகலை என்னுடைய மகள் போன்றவர். அவரது வெளியேற்றம் எனக்கு வருத்தம் அளிக்கிறது. அவருடைய காமெடியை மிஸ் செய்கிறேன். ஆனால் இது அவர் விருப்பப்பட்டு எடுத்த முடிவு.

இனிவரும் காலங்களில் அவர் தொகுப்பாளினி உள்ளிட்ட வேலைகளை கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.