Charmi Welcomes Corona
கொரானா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கி இருப்பதை வாழ்த்து கூறி வரவேற்றுள்ளார் பிரபல நடிகை. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Charmi Welcomes Corona : தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருத்தவர் ஷார்மி.

தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகையாக இவர் போதை மருந்து கடத்தல் வழக்கில் கூட கைதாகி இருந்தார். எப்போது சர்ச்சைக்குரிய பிரபலமாகவே வலம் வருகிறார்.

மாஸ்டர் டீஸர் எப்போது?? மேடையில் முதல் முறையாக லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் – வைரலாகும் வீடியோ

இவர் தற்போது டிக் டாக்கில் ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் கரோனா வைரஸ் பரவ தொடங்கி இருப்பதை சிரிப்புடன் வரவேற்று வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தும் கொரானா வைரஸை நடிகை ஷார்மி வரவேற்று வீடியோ வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் இதனை விமர்சனம் செய்து வருகின்றனர், முதல்ல கரோனா உங்களை தான் தாக்கணும் எனவும் சாபம் விட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.