Charli Chaplin 2

Charli Chaplin 2 Review : அம்மா கிரியேஷன் தயாரிப்பில் சி.தினகரன் இயக்கத்தில் பிரபு தேவா, பிரபு, நிக்கி கல்ராணி, ரவி மரியா என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள படம் சார்லி சாப்ளின் 2.

முதல் பாகம் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

படத்தின் கதைக்களம் :

ஒரு மேட்ரி மோனி வைத்து இயக்கி வருகிறார் பிரபு தேவா. ஊருக்கே திருமணம் செய்து வைக்கும் நம்ம வீட்டு பிள்ளைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என அவரது குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர்.

இந்நிலையில் பிரபு தேவா நிக்கி கல்ராணியை சந்தித்து காதல் வலையில் வீழ்கிறார். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து விடுகின்றனர்.

இந்நிலையில் யாருக்கோ ஒருவருக்கு நிக்கி கல்ராணி கொடுத்த முத்தத்தால் பிரபு தேவா நிக்கியை திட்டி தீர்க்கிறார்.

நிக்கி வேறொரு மனிதர்க்கு ஏன் முத்தம் கொடுத்தார்? அதன் பின்னர் இவர்களது வாழ்க்கையில் நடந்தது என்ன? என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

பிரபு தேவா :

பிரபு தேவா வழக்கம் போல இப்படத்தில் தன்னுடைய நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

பிரபு தேவாவின் நண்பர்கள் கூட்டமாக நடித்துள்ளவர்களின் கலாட்டாக்கள் ரசிக்கும் படியாக அமைந்துள்ளன.

பிரபு :

பிரபு வழக்கம் இந்த படத்திலும் எப்போதுமான எதார்த்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார்.

நிக்கி கல்ராணி :

நிக்கி கல்ராணியின் நடிப்பும் ரசிகர்கள் ரசிக்கும் படியாக அமைந்துள்ளன.

தொழில்நுட்பம் :

இசை :

அம்ரீஷ் கணேஷின் இசை படத்திற்கு ஓரளவிற்கு பலம் சேர்ந்துள்ளது. இருந்தாலும் என்ன மச்சான் பாடலை தவிர மற்ற பாடல் ரசிகர்களை கவரும் விதத்தில் இல்லை.

மற்ற தொழ்ல்நுட்ப கலைஞர்களின் பணிகள் படத்திற்கு தேவையான அளவில் அமைந்துள்ளன.

தம்ப்ஸ் அப் :

1. பிரபு தேவா, பிரபு நடிப்பு
2. ஒரு சில காமெடி கலாட்டாக்கள்
3. பிரபு தேவாவின் நடனம்

தம்ப்ஸ் டவுன் :

1. முதல் பாகத்தில் இருந்த காமெடியில் பாதியளவு கூட இல்லை
2. முதல் பாகம் 90’ஸ் ரசிகர்களுக்கு பிடிக்கும் அதற்காக அதே பாணியில் இரண்டாம் பாகமும் அமைந்திருப்பது.
3. சீரியல்களை போலவே சில காட்சிகள் அமைந்துள்ளன.

REVIEW OVERVIEW
சார்லி சாப்ளின் 2 விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
charli-chaplin-2-reviewமொத்தத்தில் சார்லி சாப்ளின் 1 படத்தை போன்று இல்லை என்றாலும் ஓரளவிற்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இப்படம் அமைந்துள்ளது.