Chappang Kilangu Chukka :
Chappang Kilangu Chukka :

Chappang Kilangu Chukka : பொதுவாக சேப்பங்கிழங்கு என்றாலே அதனை கார குழம்பு மட்டுமே செய்ய முடியும் என்று நினைத்து கொண்டு இருக்கும் பலருக்கு, இதோ புதிய முறையில்

சேப்பங்கிழங்கு சுக்கா.

தேவையான பொருட்கள் :

சேப்பங்கிழங்கு – ¼ கிலோ
வெங்காயம் – 2
பூண்டு – 5 பல்
இஞ்சி – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
சாம்பார் பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – ¼ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு – சிறிதளவு

செய்முறை :

சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு பொறிந்ததும், சீரகம்,உலுத்தப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு போட்டு பி அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

வதங்கியதும், நெருப்பை குறைத்து பின் அதில் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

மசாலா நன்கு கலந்த பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள சேப்பங்கிழங்கை போட்டு கிழங்கு உடையாமல் மசாலாவுடன் சேரும்படி கலந்து விட வேண்டும்.

மிதமான சூட்டில் 5 நிமிடம் கழித்து மீண்டும் ஒரு முறை கிளறி விட்டு இறக்கினால் சுவையான சேப்பங்கிழங்கு சுக்கா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here