ஆபரேஷன் முடிந்து வீட்டுக்கு வந்த அர்ச்சனா வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Changes in VJ Archana Voice : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. ஆர் ஜே-வாக பணியாற்றிய இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார்.

இதனையடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் : பிரதோஷ-பௌர்ணமி தரிசனம்

ஆபரேஷன் முடிந்து வீட்டுக்கு வந்த அர்ச்சனா.. குரலில் ஏற்பட்ட மாற்றத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்

இந்தநிலையில் சில வாரங்களுக்கு முன்னர் இவர் மூளை அருகே அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் இருந்து வந்த அர்ச்சனா தற்போது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

இது குறித்த வீடியோ ஒன்று அர்ச்சனாவின் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனையிலிருந்து இவர் தனக்கு உதவியாக இருந்த நர்ஸ்கள் குறித்து பேசியுள்ளார். ஆப்ரேஷன்க்கு பிறகு அர்ச்சனாவின் குரலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. என்னை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Cook With Comail 3-யில் இந்த இரண்டு கோமாளிகள் இல்லையாம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்