Changes in India's Parliament Meets
Changes in India's Parliament Meets

Changes in India’s Parliament Meets  : கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்ற முதல்முறையாக பல்வேறு மாற்றங்கள் கட்டுப்பாடுகளுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடரை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

1952ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு மாற்றங்களுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் இருப்பது இதுவே முதல்முறையாகும். தற்போது நாடாளுமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை பார்ப்போம்.

முதல் முறை மாடங்களில் அமர் எம்பிக்கள், அவை அலுவல்களை சிரமமின்றி பார்ப்பதற்கு வசதியாக பெரிய தொலைக்காட்சி திரைகளும் ஒலிபெருக்கிகள் ஆங்காங்கே வைக்கப்படும் .

அனைத்து உறுப்பினர்களும் அவை அலுவல்களில் பங்கேற்கும் வகையில் அவர்களின் இருக்கைக்கு முன் ஒலிபெருக்கி பொருத்தப்படும்.

அவைகளில் குளிர்சாதன வசதிகள் பயன்படுத்தப்படும் என்பதால் கொரோனா எளிதில் பரவும் அபாயம் உள்ளது. கிருமி தொற்று அளிக்கும் புற ஊதா கதிர்வீச்சு பயன்படுத்தப்படும்.

உறுப்பினர்கள் அலுவலர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு இடையேயான நெருக்கத்தை தடுக்க பிளாஸ்டிக் திரைகள் பொருத்தப்படும்.

நாடாளுமன்ற அலுவல்களை நேரடியாக ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவர். அவசியமின்றி காகித பயன்பாடு இருக்காது என்று அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.