Changes in Hindi Remake

கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் செய்யப்பட உள்ள மாற்றம் குறித்து தகவல்கள் வெளியாக அதனை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Changes in Hindi Remake : தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் மூலம் கிடைத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் கைதி என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார்.

தற்போது கைதி படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. கார்த்தியின் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி கைவி படத்தின் இந்தி ரீமேக்கில் மனைவி கதாபாத்திரத்தை சேர்க்கை இருப்பதாகவும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து ரசிகர்கள் கதைக்கு தேவையில்லாத கதாபாத்திரம் என இந்த முயற்சியை பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர். ஆனால் இந்த கதாபாத்திரத்தை சேர்ப்பது படத்தில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.