வலிமை படத்துக்கு வந்த விமர்சங்களை கருத்தில் கொண்டு பீஸ்ட் படக்குழுவினர் படத்தின் பெரிய மாற்றத்தை செய்துள்ளனர்.

Changes in Beast Running Time : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்த படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து யு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 35 நிமிடங்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

வலிமை படத்துக்கு நேர்ந்த சோகத்தால் பீஸ்ட் படக்குழுவினர் எடுத்த முடிவு.. விஜய் ரசிகர்கள் ஹாப்பி.!!

மேலும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் பீஸ்ட் படத்தின் ரன்னிங் டைம் வலிமை படத்தைப் போல இரண்டு மணி நேரம் 50 நிமிடங்கள் தான் இருந்துள்ளது.

வலிமை படம் ரிலீசான பிறகு இந்த படத்தை பார்க்க நிறைய பொறுமை வேண்டும் என தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் ரன்னிங் டைமை குறித்து வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பீஸ்ட் படக்குழு அதனைக் கருத்தில் கொண்டு ரன்னிங் டைமை குறைத்து இறுதியில் இரண்டு மணிநேரம் 35 நிமிடங்கள் ஆக மாற்றியுள்ளது. 

இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படத்தின் ரன்னிங் டைமை குறைத்ததே இந்த படத்தின் பாதி வெற்றி என கொண்டாடி வருகின்றனர்.

வலிமை படத்துக்கு நேர்ந்த சோகத்தால் பீஸ்ட் படக்குழுவினர் எடுத்த முடிவு.. விஜய் ரசிகர்கள் ஹாப்பி.!!

இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.