Chandramukhi 2 Update
Chandramukhi 2 Update

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chandramukhi 2 Update : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டடித்த திரைப்படம் சந்திரமுகி.

பாபா படத்திற்கு 3 வருட இடைவெளிக்கு பிறகு இப்படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

800 நாட்களை தாண்டி இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹிந்தியில் இப்படம் ரிமேக் செய்யப்பட்டது.

அக்ஷய் குமார், வித்யா பாலன் ஆகியோர் இணைந்து நடிக்க அங்கும் இப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது ஹிந்தியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாம்.

அரசியலுக்கு தாவிய அஜித் – தல 60 குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.!

பர்ஹத் சாம்ஜி உருவாக்கியுள்ள இந்த படத்தின் கதைக்கு தயாரிப்பாளர் பூஷன் குமார் கிரீன் சிக்னல் காட்டியுள்ளார்.

ஆனால் அக்ஷய்குமார், வித்யா பாலன் ஆகியோர் இந்த படத்தில் நடிப்பார்களா என்பது கேள்வி குறியாக உள்ளது.

அக்ஷய் தற்போது காஞ்சனா பட ரி மேக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.