சந்திரமுகி 2 படத்தின் ஜோதிகாவுக்கு பதிலாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வாசு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பல வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்க வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். அதே சமயம் முதல் பாகத்தில் சந்திரமுகி ஆக ஜோதிகா நடித்திருப்பார்.

இரண்டாம் பாகத்திலும் அவர் சந்திரமுகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காமல் போனது. அதே சமயம் இந்த படத்தில் சந்திரமுகி ஆக நடிப்பது யார் என்ற விஷயமும் தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது லட்சுமி மேனன் தான் அந்த ரோலில் நடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் லட்சுமி மேனனுக்கு இந்த ரோல் எல்லாம் செட் ஆகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.