சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகை கங்கனா ரணாவத் குறித்து படக்குழு வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பி.வாசு. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வெற்றி திரைப்படமான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இதில் ரஜினிக்கு பதிலாக கதாநாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க வடிவேலு, லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார், சிருஷ்டி டாங்கே, கங்கனா ரணாவத் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தற்போது மும்பையில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பில் பிரபல பாலிவுட் நடிகை கந்தனா ரணாவத் தனக்கான போர்ஷனை நிறைவு செய்து இருக்கிறார். இது குறித்து நடிகை கங்கனா அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவின் மூலம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சந்திரமுகி 2 படக்குழுவினர் இறுதி நாள் படப்பிடிப்பை நிறைவு செய்து விடை பெற இருக்கும் நடிகை கங்கனாவுக்கு கேக் வெட்டி தங்களது எமோஷனை வெளிப்படுத்தியுள்ளனர். அதன் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் பகிர்ந்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.