பி.வாசு இயக்கத்தில் உருவாக இருக்கும் “சந்திரமுகி 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2005 ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் தான் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 17 வருடம் கழித்து தற்போது எடுக்க உள்ளனர். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் வைகைப்புயல் இணைந்துள்ளார்.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக லட்சுமிமேனன் இணைந்து இருப்பதாக கூறப்படுகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படைத்திற்கு பாகுபலி படத்தை இசையமைத்த எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படம் நேற்றைய தினம் தொடங்கப்பட உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அவரின் குருவான ரஜினிகாந்திடம் ஆசிர்வாதம் பெற்றிருந்ததை பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் மைசூருவில் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இதில் பி. வாசு, ராகவா லாரன்ஸ், வடிவேலு மற்றும் ராதிகா ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதன் மூலம் நடிகை ராதிகா சரத்குமார் இப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ள நிலையில் இப்படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை லைட்டா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது. இது தற்போது வைரலாகி வருகிறது.