விட்ட இடத்தை பிடிக்கும் நடிகை… சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவுக்கு இவரா?

Chandramukhi 2 Movie Cast : தமிழ் சினிமாவில் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு,

ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. ஆனால் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் சந்திரமுகியாக ஜோதிகா நடிக்கலாம் என கூறப்பட்டது மேலும் அவரை இரட்டை வேடத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் பொன் மகள் வந்தாள் படத்தின் பிரமோஷனுக்காக ஜோதிகா அளித்த பேட்டி ஒன்றில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. தன்னுடைய கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

சந்திரமுகி படத்தில் சிம்ரன் தான் கமிட் ஆகி நடித்தார். ஆனால் அவர் அந்த சமயத்தில் கர்ப்பம் ஆகி விட்டதால் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டார். அதன் பின்னர்தான் இந்த வாய்ப்பு ஜோதிகாவிற்கு கிடைத்தது.

எனவே சந்திரமுகி 2 படத்தில் சிம்ரன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சந்திரமுகி படத்தில் நடித்த வடிவேலு, நாசர் ஆகியோர் இந்த படத்தில் நடிப்பார்களா?? இல்லையா?? என்பதையும் பொறுத்திருந்தால் பார்க்க வேண்டும்.