இரண்டரை வருஷமாக வயிற்றில் குழந்தையை சுமந்து உள்ளார் சின்னத்திரை நடிகை ஒருவர்.

Chandralekha Serial Trolls : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சந்திரலேகா. இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இரண்டு நடிகைகள் கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.

இரண்டரை வருஷமாக வயிற்றில் குழந்தையை சுமந்த சின்னத்திரை நடிகை - உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா?

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக இவர்கள் இருவரும் கர்ப்பமாகவே இருந்து வருகின்றனர். ஆனால் 10 மாத கதையையே இத்தனை வருஷமாக காட்டி வருகிறீங்களே, கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லையே என ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர்.

இரண்டரை வருஷமாக வயிற்றில் குழந்தையை சுமந்த சின்னத்திரை நடிகை - உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா?

இந்த நிலையில் தற்போது இருவருக்கும் ஒரு வழியாக குழந்தை பிறந்தது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஒரு தாய் பத்து மாதம் தான் குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றெடுப்பார். ஆனால் சந்திரலேகா சீரியல் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கர்ப்பமாகவே இருப்பது போலவே நடித்தது நெட்டிசன்கள் மத்தியில் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.