Chandhira Kumari

Chandira Kumari : ராதிகா நடித்து வந்த சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார். அவருக்கு பதிலாக யார் நடிக்க உள்ளார் என்பதையும் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ராதிகா வெள்ளித்திரையை போலவே தற்போது சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்.

சன் டிவியில் தொடர்ந்து இவரது அடுத்தடுத்த சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது சந்திரகுமாரி என்ற வரலாற்று சீரியல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலிலும் ராதிகாவே நடித்து வந்த நிலையில் தற்போது அவர் சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகையான விஜி சந்திரசேகர் நடிக்க உள்ளாராம்.

இதனால் ராதிகா விஜி சந்திரசேகருக்கு வாழ்த்து கூறி அவரை வரவேற்று ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.