promo video
லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருதை மோகன் வைத்தியா கொடுக்க, அதை அவர் தூக்கி எறியும் வீடியோ வெளியாகியுள்ளது.

Chameleon award goes to losiya promo video – கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 70 நாட்களை தாண்டி பரபரப்புடன் போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே வெளியே சென்ற அபிராமி, சாக்ஹி, மோகன் வைத்தியா ஆகிய மூவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். எனவே, பல களோபரங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. காஜலுக்கு குசும்ப பார்த்தீங்களா? – போட்டோ இதோ.!

இந்நிலையில், இன்று காலை வெளியான புரமோ வீடியோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு விருதுகள் கொடுக்கப்படுகிறது. இதில், பச்சோந்தி விருதை லாஸ்லியாவுக்கு மோகன் வைத்தியா பரிந்துரைக்க, சாக்‌ஷி அதை லாஸ்லியாவுக்கு அணிவிக்க முயல்கிறார். ஆனால், கோபமடைந்த லாஸ்லியா இந்த விருது எனக்கு வேண்டாம் எனக்கூறி, அதை கீழே தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார். இதைக்கண்டு மோகன் வைத்தியாவும், சாக்‌ஷியும் கோபப்படும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே, பிக்பாஸ் 2வது சீசன் போட்டியில் கலந்து கொண்ட நடிகை காஜல் லாஸ்லியாவை ’பச்சோந்தி’ என விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://platform.twitter.com/widgets.js