Chakra Release Issue

விஷால் நடிப்பில் வெளியாக உள்ள சக்ரா திரைப்படத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Chakra Release Issue : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் சக்ரா திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தப் படம் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பிலும் இயக்குனர் ஆனந்தன் இயக்கத்திலும் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Trident arts நிறுவனம் தயாரிப்பாளர் ரவியிடம், விஷாலை வைத்து படம் இயக்கி தருவதாக சக்ரா பட இயக்குனர் ஆனந்தன் கூறியதனால் தற்போது ரவி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதனால் விஷாலின் சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு விஷால் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.