Chakra Movie Trailer
Chakra Movie Trailer

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Chakra Movie Trailer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது சக்ரா, துப்பறிவாளன் 2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

அறிமுக இயக்குனர் எம் எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஷர்த்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸன்ட்ரா, ரோபோ ஷங்கர், கே ஆர் விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இந்த ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் ரூபாய் 5 கோடி வசூல் கொடுத்த முதல் திரைப்படம் இது தான்.. பழசை நினைத்து பெருமைப்படும் ரஜினி ரசிகர்கள்!

சைபர் க்ரைம் பற்றிய திரைப் படமாக இப்படம் உருவாகி உள்ளது என்பது ட்ரெய்லர் மூலம் தெரிய வந்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது.

தமிழில் இந்த ட்ரைலரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.