சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கயல் சீரியல் சைத்ரா ரெட்டி.

தமிழ் சின்னத்திரையின் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சைத்ரா ரெட்டி. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் வில்லியாக நடித்து வந்த இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கன்னத்தில் முத்தமிட்ட சைத்ரா ரெட்டி - வைரலாகும் போட்டோ

இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து வருகிறது. மேலும் இவர் வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து மிக முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

அதுபோல் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருந்த சைத்ரா ரெட்டி தற்போது சிரஞ்சீவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட அவர் காட்பாதர் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வரலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆன நிலையில் நேற்று ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வந்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கன்னத்தில் முத்தமிட்ட சைத்ரா ரெட்டி - வைரலாகும் போட்டோ

சைத்ரா ரெட்டி அவர்களும் காலா படத்தின் போதே ரஜினியின் கன்னத்தில் முத்தமிட்டு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சிவாஜி படத்தின் 15 வருட பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கன்னத்தில் முத்தமிட்ட சைத்ரா ரெட்டி - வைரலாகும் போட்டோ
https://twitter.com/ChaitraReddyoff/status/1537009960587911168?t=aPVCmo8ybB-BA0cebpiX_Q&s=19