
Central team Report in Cyclone Gaja – ‘கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரும் அளவில் பாதிப்படைந்துள்ளது என்று ஆய்வு செய்ய சென்ற மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர்’.
மேலும் கூறியதாவது: கஜா புலால் தமிழகம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதிலும், மிக பெரிய இழப்பை டெல்டா மாவட்டங்களில் வாழும் மக்கள் அடைந்துள்ளனர்.
மேலும், மத்திய குழு டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட புயல் பாதித்த மாவட்டங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக மத்திய குழு ஆய்வு நடத்தி வருகிறது. இதுவரை புதுக்கோட்டை, தஞ்சாவூர், மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், உள் கிராமங்களில் மத்திய குழு ஆய்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கடைசி நாளாக நாகை மற்றும் காரைக்காலில் ஆய்வு செய்கின்றனர்.
கஜா புயல் பாதிப்பை குறித்து மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட் கூறுகையில்: “கஜா புயல் பாதிப்பை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.
காஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த புயலால் பட்டுகோட்டை, திருவாரூர், தஞ்சை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டிப்பாக நிவாரணம் கிடைக்கும்.ஏற்கனவே மத்திய அரசு நிவாரண நிதி வழங்கி உள்ளது.
இந்நிலையில் எங்களின் அறிக்கையின் முடிவில், அடுத்தகட்ட நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும்” இவ்வாறு கூறினார்.