Central Government Rules on Cinema Shooting
Central Government Rules on Cinema Shooting

சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Central Government Rules on Cinema Shooting : இந்தியாவில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக புது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது அவைகளின் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஜாலி… ஜாலி…மத்திய அரசு காலிப் பணிடங்களுக்காக ஒரே பொதுத் தேர்வு!!

ஏற்கனவே சின்னத்திரை சீரியல்களுக்கான படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெள்ளித்திரை படப்பிடிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அது குறித்த விவரங்கள் இதோ.

  1. படப்பிடிப்பின் போது பிரேமில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.
  2. உடை, உபகரணங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  3. கேமரா உள்ளிட்ட உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்கள் கட்டாயம் கையுறை அணிய வேண்டும்.
  4. படப்பிடிப்பு தளங்களில் ஆறடி சமூக இடைவெளியை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.
  5. குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும்.
  6. வெளிப்புறங்களில் சூட்டிங் நடத்தப்பட்டால் கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பார்வையாளர்களுக்கு ஒருபோதும் அனுமதி இல்லை.
  7. படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்கள் அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  8. படப்பிடிப்பு தளங்களில் எச்சில் துப்புதல் கூடாது என கூறியுள்ளது.
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.