cellphone
ஆந்திராவை சேர்ந்த ஒரு நபர் தமிழகத்தில் வேலை ஆட்களை அமர்த்தி செல்போன் திருட்டு தொழில் ஈடுபட்ட வந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cellphone robbery gang is arrested in chennai – சமீபத்தில் சென்னை பூக்கடை பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதன்பின், அவர்களின் செல்போன் எண்களை வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டனர். அதன்பின் அவர்களின் செல்போன் உரையாடல்களை தொடர்ந்து ஒட்டுக்கேட்ட போது அவர்கள் செல்போன் திருடுவதை தொழிலாக கொண்டுள்ளது தெரியவந்தது. மேலும் சோழவரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அவர்கள் அடிக்கடி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த வீட்டில் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான செல்போன்கள் இருப்பது கண்டனர். அதன்பின் அங்கு தங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பலுக்கு ரவி என்பவர் தலைவராக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ரவி செல்போன் திருட்டு தொழிலை ஒரு மார்க்கெட்டிங் தொழில் போல செய்து வந்துள்ளார்.

திருச்சி நகைக்கடையில் கொள்ளை அடித்தது எப்படி? அதிர்ச்சி தரும் புகைப்படங்கள்

அதாவது ஆந்திராவில் இருந்து வாலிபர்களை சென்னைக்கு அழைத்து வந்து செல்போனை திருடுவது எப்படி என முறையாக பயிற்சி அளித்துள்ளார். சென்னையின் பல்வேறு இடங்களில் மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களுக்கு அவர்கள் செல்போன்களை திருடி வந்துள்ளனர். ஒரு நாளைக்கு 3 செல்போன்கள் திருட வேண்டும். அப்படி செய்தால் வாரம் ரூ. 5000 முதல் 6000 வரை சம்பளம் கொடுத்துள்ளார்.

ஓவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆந்திரா சென்று அந்த செல்போன்களை விற்று பணமாக்கி விட்டு, தனது குடும்பத்துடன் தங்கிவிட்டு மீண்டும் திங்கட்கிழமை வந்து தனது தொழிலை தொடங்கியுள்ளார் ரவி. கடந்த 2 வருடங்களில் மட்டும், இந்த கும்பல் 5000 செல்போன்கள் வரை திருடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு சென்னை நகரில் 40 முதல் 50 செல்போன்களை அந்த கும்பல் திருடியுள்ளது.

தல 61 படத்திற்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு – ஜாக்பாட் அடிக்க போவது யாருக்கு ?

இதில், பண்டிகை நாட்களில் விடுமுறை எடுக்காமல் ஓவர் டைம் பார்த்தால் அதற்கு சிறப்பு இன்சென்டிவ் எல்லாம் உண்டாம். வார நாட்களில் சிறப்பாக செயல்படுபவர்களை பாராட்டி கூட்டமும் நடத்துவானாம். போலீசாரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக ஆவடி, அம்பத்தூர் என 2 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டை மாற்றிக் கொண்டே இருந்துள்ள ரவி தற்போது போலீசாரிடம் பிடிபட்டுள்ளான்.