Celebrities Wishes to Sivakarthikeyan

சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் சூரி.

Celebrities Wishes to Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அயலான் மற்றும் டாக்டர் படங்கள் வெளியாக உள்ளன.

இதனைத்தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் டான் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இன்று பிறந்தநாள் என்பதால் டான் படக்குழு இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.

மேலும் சூரி ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் தன் அன்புத் தம்பி டானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புகைப்படத்துடன் தன் டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் பல திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கூறுகின்றனர்.