ராஜாவூர் லயோலா கல்லூரியில் விஜய் பட தயாரிப்பளர் பிடி செல்வகுமாருக்கு பாராட்டு விழா நடைபெற்று உள்ளது.

Celebrities Wishes to PT Selvakumar : ராஜாவூர் லயோலா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கலப்பை இயக்க தலைவர் பிடி செல்வகுமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்தியாவிலேயே கொரானா காலகட்டத்தில் அதிக சேவை மற்றும் மாணவர்களுக்கு கல்வி கூடம், மருத்துவாழ்மலை மூலிகை தியான மண்டபம், குருசுமலை தோமையார் ஆலயம், மலைகுகை மாதா கோயில் மற்றும் தனிப்பட்ட முறையில் கொரானா காலத்தில் 175 நாட்களுக்கு மேல் ஏழை எளியோருக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள், நிதியுதவி வழங்கி தொண்டாற்றி வரும் பிடி செல்வகுமாருக்கு பாராட்டு விழா லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் லயோலா கல்லூரி சேர்மன் நிக்கோலஸ் தலைமை தாங்கினார். முன்னிலை வகித்த தவத்திரு பாலபிரஜாபதி அடிகளார் பேசும்பொழுது “பிடி செல்வகுமார் கலைத்துறையில் சாதனை படைத்து “கலப்பை மக்கள் இயக்கம்” என்னும் ஒரு இயக்கத்தை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தொண்டாற்றி வருவது பாராட்டுக்குரியது! நான் பாரத பிரதமருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தென்குமரியைச் சார்ந்த ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த இளைஞன் கொரானா காலகட்டத்தில் வெளியே வந்தால் சட்டப்படி குற்றம் என்ற ஒரு கடுமையான சூழ்நிலையில் சமூக போராளியாய் மக்கள் வெளியே வரமுடியாத நேரத்தில் அனைவருக்கும் உதவி செய்தது மிகவும் பாராட்டுக்குரியது !அவரைப் பற்றி ஞாயிறுதோறும் பிரதமர் மக்களுடன் உரையாடும் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேச வேண்டும் .

14 ரன் வித்தியாசத்துல, இலங்கை வெற்றி : ஆடுகள விவரம்..

ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் ஆங்கில கல்விக்காக பள்ளி கட்டிடம் கட்டி கொடுத்தது இந்தியாவிலேயே யாரும் செய்யாத சாதனை ! இது மாதிரியான நற்செயல்களை நாம்தான் நாட்டு மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் !நாடு முழுவதும் அவருடைய நற்செயல்கள் கண்டிப்பாக தெரியவேண்டும் இதை பின்பற்றி பல்வேறு இளைஞர்களும் சமூக சேவை செய்யும் எண்ணம் கொண்டவர்களாக மாற வேண்டும்! எத்தனையோ மனிதர்களிடம் பணம் உள்ளது ! ஆனால் சேவை செய்யும் நல்ல மனம் இல்லை! கோவிலையும் கல்வி கூடத்தையும் கட்டித் தந்த நபரை கண்டிப்பாக இந்த சமூகம் தட்டிக் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

விஜய்சேதுபதி சொன்னா உலகமே கேட்க்கும்! – Director RK Selvamani Speech | Laabam Press Meet

பின்னர் பேசிய பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு பேசுகையில் “பிடி செல்வகுமார் அவர்கள் கலை துறையில் மிக சிறந்த மனிதர்களுள் ஒருவர் ! நான் இங்கு வந்தபொழுது பிடி செல்வகுமாரின் கல்வி சேவை, குபேரன் மலை, மூலிகை தியான மண்டபம், குருசுமலை குகை மாதா கோவில், பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தல், ஏழை எளிய கிராமியக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விவசாயிகளுக்கு கால்நடைகள் வழங்குதல் போன்ற அவருடைய பல்வேறு நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டேன்.

அவருடைய பாராட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். நல்ல மனிதர்களுடைய சேவைகள் நாட்டுக்கு தெரியவேண்டும் எதிர்கால இளைஞர் சமுதாயம் இவரைப் போன்று சேவை மனப்பான்மை உடையவர்களாகவும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் .அதற்கு ஒரு முன்னுதாரணமாக பிடி செல்வகுமார் அவர்கள் இருக்கிறார் .நான் “இளைய தளபதி” விஜய்யை வைத்து படத்தை இயக்கி இருக்கிறேன். திரைப்படமும் பெரிய வெற்றி பெற்றது பேரரசு என்ற பெயர் தமிழ் திரையுலகில் பெரிய காரணம் இளைய தளபதி விஜய் தான்.

ஆனால் இளையதளபதி விஜய் அவர்கள் திரைத்துறையில் நுழையும் பொழுது ஆரம்ப காலகட்டத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்! மிகவும் கஷ்டப்பட்டார்! ஆனால் அவருக்கு பின்புலமாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி இன்று தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய திரை உலகிலேயே ஒரு மிகப் பெரிய நடிகராக வலம் வர முக்கிய காரணகர்த்தா பிடி செல்வகுமார் அவர்கள் தான் இருந்திருக்கிறார்!!

விஜய் அவர்களின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அவருடைய வளர்ச்சி பாதை வரை பிடி செல்வகுமாரின் பங்கு மிகப்பெரியது ! அப்பேர்ப்பட்ட ஒரு நல்ல மனிதரை பாராட்டுவதில் நான் பெருமை அடைகிறேன். உங்களுக்கெல்லாம் சேவைகள் செய்வதற்கு ஒரு மிகச்சிறந்த மனிதர் கிடைத்து உள்ளார் அவரை போன்று அடுத்தவர்களும் சேவை நோக்கம் கொண்டவர்கள் ஆக வரவேண்டும். அவருடைய இந்த சேவைகள் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய மாநிலம் முழுமைக்கும் சென்றடைய வேண்டும். அவரை முன்னுதாரணமாக கொண்டு இளைஞர்கள் செயல்பட வேண்டும்” என்று கூறினார். மேலும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் சேர்மன் பிரேமலதா, எல்எம் எஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சாம் சுரேஷ்குமார் நடன இயக்குனர் நடிகை ராதிகா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். பிடி செல்வகுமார் ஏற்புரை நிகழ்த்தினார்.

விழாவில் கல்லூரி மாணவ மாணவிகளின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறந்த கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது கலப்பை மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன் கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.