மீண்டும் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சந்திரசேகர், லியோனி, பாண்டே, நாஞ்சில் சம்பத் என பல பிரபலங்கள் பாராட்டி பேசி உள்ளனர்.

Celebrities Wishes to Meendum Team : மீண்டும் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சந்திரசேகர், அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் படத்தை பார்த்து மிரண்டு போயிட்டேன். இப்படியெல்லாம் படமெடுக்க முடியுமா என நினைத்தேன். ஒரு கிராமமே காணாமல் போனது போல கதையை எடுத்து அதை கச்சிதமாக இயக்கி இருந்தார் இயக்குனர் சரவணன் சுப்பையா. அவரைப் போன்ற திறமையான கலைஞர்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை என பேசினார். என் பையன் விஜய் ஆக இருந்தாலும் அஜித் படங்களையும் நான் பார்ப்பேன். அந்த படத்தில் கிழக்கே உதிக்கும் சூரியனே பாட்டைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு புல்லரிக்கும் என கூறினார். அவர் மீண்டும் என்ற அற்புதமான கதையை கையில் எடுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ள கதிரவனை நிர்வாணமாக்கி வெந்நீரில் முக்கி அடிக்கும் காட்சிகளைப் பார்த்தபோது மிரண்டு போனேன். படம் நிச்சயம் அனைவராலும் பேசப்படும் ஒன்றாக இருக்கும் என கூறினார். ஜெயில், இரும்புத்திரை உள்ளிட்ட படங்களை வெளியிட்ட பிடி செல்வகுமார் வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளது என பேசினார்.

Fitness-தான் ரொம்ப முக்கியம் – Actor Arun Vijay Motivation Speech | HD

கண்டிப்பாக இந்த படம் பேசப்படும். ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவன்மார்கள் போல ட்ரெய்லரில் பார்த்தது வித்தியாசமாக இருந்தது. நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என பேசினார்.

2,000 பெண் ஊழியர்கள் சாலை மறியல் : கலெக்டர் பேச்சுவார்த்தை..

அவரை தொடர்ந்து இந்த விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி அவர்கள் பேசும்போது நான் சினிமாவை விமர்சனம் செய்தது ஒரு பொழுது போக்கிற்காக தான், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் என கூறினார். மேலும் 19 வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் ஒரு படத்தில் நடித்துள்ளேன். அதேபோல் இயக்குனர் சரவணன் சுப்பையா அவர்களின் 19 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படத்தை இயக்கியுள்ளார். படத்தை மிகவும் வித்தியாசமாக எடுத்துள்ளார். திரையரங்குகளில் சென்று இந்த படத்தை பாருங்கள்.

எதுக்குடா என்ன கூட்டிட்டு வந்திங்க.., Dindigul I Leoni செம Comedy – குலுங்கி சிரித்த அரங்கம்..! | HD

பிறகு ரங்கராஜ் பாண்டே அவர்கள் பேசியதாவது, படத்தின் கதாநாயகி அனகா அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நல்ல கலைஞர்களை தமிழ் சினிமா விலக்கி வைத்து இருந்தாலும் அவர்களை கைவிட்டு விடாது. அதுபோலத்தான் சரவணன் சுப்பையா மீண்டும் படத்தின் மூலமாக மீண்டும் வந்துள்ளார் என பேசினார். இந்த இடைப்பட்ட காலத்தில் கூட அவர் ஹாலிவுட் படங்களை விமர்சனம் செய்து வந்தார். நல்ல திறமையான படைப்பாளி என பேசினார். இந்த படத்தின் மூலம் சரவணன் சுப்பையா அவரை மீண்டும் திறமையான படைப்பாளி என நிலைநாட்டுவார் என கூறினார்.

சிஸ்கே அணியில், மீண்டும் தமிழக வீரர் அஸ்வின் ஆட்டம்?

அதன்பிறகு பிடி செல்வகுமார் அவர்கள் பேசியதாவது, இது போன்ற திறமையான கலைஞர்களை திரையுலகைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சினிமா அரசியல் பெருமக்களும் ஆதரிக்கவேண்டும். அவர்களை அரவணைக்க வேண்டும். அவர் ஒரு நல்ல கலைஞன் என்பதை அவருடைய முதல் படமான சிட்டிசன் படத்திலேயே அவர் நிரூபித்துவிட்டார். பல்வேறு சிரமங்களை தாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தைப் பார்க்கும்போது நல்ல மேக்கிங் தெரிந்தது. படத்தின் கதாநாயகன் கதிரவன் கிட்டத்தட்ட 16 நாட்கள் நிர்வாணமாக நின்று துணிச்சலாக நடித்துள்ளார். அவருக்கு தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு நல்ல இடம் காத்துக் கொண்டிருக்கிறது. இலங்கைக் கடற்படையால் சிக்கி மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அழகாக பேசியுள்ளனர். நிச்சயமாக இந்த திரைப்படம் சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என கூறினார்.

பிறகு நாஞ்சில் சம்பத் பேசியதாவது, இலக்கியம், பேச்சு மற்றும் சினிமா மூன்றுமே ஒன்றுதான். இந்த சினிமா என்னையும் விடலை. என்னையும் நடிக்க வைத்து விட்டது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நான் வந்து நிற்பது பெருமையாக இருக்கிறது. படத்தில் அற்புதமான கலையை பார்க்க முடிகிறது. ஒரு குழந்தைக்கு இரண்டு அப்பாக்கள் என்பது போன்ற கதையை பார்க்கும்போது மிகவும் புதியதாக இருந்தது. சரவணன் சுப்பையா அவர்கள் நல்ல ஒரு படத்தை எடுத்துள்ளார். சிங்கள ராணுவத்தால் சாதாரண மக்களும் தமிழக மீனவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள், என்னென்ன சித்திரவதைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை மிக அழகாக காட்டியுள்ளார்கள். எல்லோராலும் இந்த படம் பாராட்டப்படும் என்றார்.

இந்த கொரோனா பாதிப்பு காலத்தில் மிகப் பெரிய அளவிலான சமூக சேவைகளை செய்தவர் பிடி செல்வகுமார். அவருக்கு சினிமா மேல இப்படி ஒரு ஆர்வமா? ஒரு ஸ்கூல் கட்டி கொடுத்திருப்பதாக கூட கேள்விப்பட்டேன். பெரிய சமூக தொண்டாளர். ஜெயில், இரும்புத்திரை போன்ற படங்களைத் தொடர்ந்து அவர் தான் இந்த மீண்டும் படத்தையும் ரிலீஸ் செய்கிறார். அவர் ஒரு சினிமா போராளி, இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். கதிரவன் இந்த படத்தின் மூலமாக அல்ல கதாநாயகனாக உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவர்களைத் தொடர்ந்து இயக்குனர் பேரரசு, ரவி மரியா ஆகியோர் படக்குழுவினரை பாராட்டினார்கள்.