பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பில் மிரட்டிய கார்த்திக்கு போன் போட்டு வாழ்த்து கூறி உள்ளனர் டாப் பிரபலங்கள்.

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பில் மிரட்டிய கார்த்தி.. போன் போட்டு வாழ்த்திய டாப் பிரபலங்கள் - யார் யார் பாருங்க.!! ‌

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர். உலகம் முழுவதும் 350 கோடி வசூலை தாண்டி இந்த படம் தொடர் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் படத்தில் வந்திய தேவனாக நடித்திருந்த நடிகர் கார்த்திக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் என இருவரும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த நடிகர் கார்த்தி இருவருக்கும் தனித்தனியான அறிக்கை மூலம் நன்றி கூறி ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பில் மிரட்டிய கார்த்தி.. போன் போட்டு வாழ்த்திய டாப் பிரபலங்கள் - யார் யார் பாருங்க.!! ‌

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.