Celebrities Wishes to Imman

விசுவாசம் படத்தில் தேசிய விருது கிடைத்த நிலையில் போன் செய்து வாழ்த்தி உள்ளார் தளபதி விஜய்.

Celebrities Wishes to Imman : இந்திய அரசின் தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இருந்தன. தமிழ் சினிமாவைச் சேர்ந்த அசுரன் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விசுவாசம் திரைப்படத்திற்கு இசையமைத்த இமான் அவர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விசுவாசம் திரைப்படத்திற்கக தேசிய விருது வாங்குவதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் இசையமைப்பாளர் இமான். அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய் ஆகியோர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உருக்கமாக பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் இமான். அந்த பதிவு ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது.

Attachments area