தளபதி விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கோலிவுட் பிரபலங்கள் ஒன்று சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Celebrities Joined to Vijay Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இந்த படத்தினை இயக்கி வருகிறார்.

இன்றைய ராசி பலன்.! (20.6.2021 : ஞாயிற்றுக் கிழமை)

தளபதி விஜய் வரும் 22ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார். விஜயின் பிறந்தநாள் விருந்தாக்க ஜூன் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது வரும் 21ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ், நெல்சன் திலீப் குமார், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் தளபதி விஜய் குறித்து ட்விட்டரில் இணைந்து பேச உள்ளனர். இந்த நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கவுள்ளார்.

BREAKING : உடனே இத செய்யுங்க.. மாணவர்களுக்கு சூர்யா வேண்டுகோள்..!!