பிரபல தெலுங்கு நடிகர் ராணா ஜெயப்பிரகாஷ் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Celebrities Condolences to Jayaprakash Death : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயப்பிரகாஷ். தமிழில் இவர் ஆறு, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஏராளமான படங்களில் வில்லனாகவும், காமெடியனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 74 வயதாகிறது.
இந்த நிலையில் ஆந்திராவில் இவரது வீட்டில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயப்பிரகாஷ் மறைவு தெலுங்கு சினிமாவிற்கு பேரிழப்பு என திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.