Celebrities Comment on Master Release

இன்னும் 2 வாரம் தான் சும்மா தெறிக்க போகுது என மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து திரையுலக பிரபலங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Celebrities Comment on Master Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர்.

இந்த படம் உலகம் முழுவதும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு கூறி வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணிக்கு மாஸ்டர் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியிலும் 13-ஆம் தேதியும் இந்தி மொழியில் 14ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து திரையுலகப் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட தொடங்கியுள்ளனர்.

அவைகளில் சில பதிவுகள் இதோ உங்களுக்காக