அஜித்தையும் அஜித்தின் நடனத்தையும் கிண்டலடித்து ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Celebrities Blast Blue Sattai Maran : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூலில் கலக்கி வரும் திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மூன்று நாளில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தை மோசமாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் ஏற்கனவே அஜீத் ரசிகர்கள் வசை பாடி வரும் நிலையில் இவர் சமீபத்தில் டுவிட்டரில் அஜித் நாங்க வேற மாதிரி பாடலுக்கு நடனமாடும் புகைப்படத்தை வெளியிட்டு பரோட்டாவிற்கு மாவு பிசையும் இந்த காட்சியை பார்த்து தியேட்டரில் சிரிக்காதவர்கள் உண்டா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவருடைய இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக நடிகை கீர்த்தி பாண்டியன் ஒரு நடிகரை தரக்குறைவாக இப்படி விமர்சனம் செய்து பதிவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஒரு படத்தைப் பார்த்து விட்டு அந்த படத்திற்கான வசனத்தை சொல்வதில் உங்களுக்கு உரிமை இருக்கிறது ஆனால் ஒருவரை கேலி செய்வது உரிமையில்லை என கூறியுள்ளார்.

தயாரிப்பாளரான ஃபோப்டா தனஞ்செழியன் அவர்கள் இந்த பதிவை பார்த்து நான் மிகவும் வருந்துகிறேன். ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழ் டாக்கீஸ் இதை மாற்றி கொண்டு நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அஜித் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுரேஷ் சந்திராவிற்கு வலியுறுத்தி வருகின்றனர்.

அஜித்தை விமர்சனம் செய்து வரும் விஜய் ரசிகர்கள் கூட முழு சட்டை மாறன் இந்த பதிவிற்கு கண்டனம் தெரிவித்து வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் சிலர் கூறியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.